காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் ரெயில்-சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று ரெயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கடைகளும் அடைக்கப்பட்டன.
புதுக்கோட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் புதுக்கோட்டை ரெயில் மறியல் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் நேற்று தமிழகம் முழுவதும் ரெயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அறந்தாங்கியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் பொன்துரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரையும், நாகுடியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 80 பேரையும், ஆவணத்தான்கோட்டையில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரையும், எரிச்சியில் முன்னாள் நகரசபை கவுன்சிலர் சக்திவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கந்தர்வகோட்டையில் பஸ் நிலையம் முன்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழய்யா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 140 பேரை போலீசார் கைது செய்தனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆவூரில், ஆம்பூர்பட்டி 4ரோட்டில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தோழமை கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்பட 207 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அன்னவாசலில் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் 160 பேர் அன்னவாசல் அரசு மருத்துவமனை முன்பு பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இலுப்பூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமையில் மறியல் செய்ததாக 140 பேரை இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அன்னவாசலில் வாடகை கார், வேன் ஓட்டுனர் சங்கத்தினர் வாகனங்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவிலில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உதயம்.சண்முகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தோழமை கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 149 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீரனூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் ரெயிலை மறிக்க முயன்றதாக 274 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரிமளத்தில், தி.மு.க.ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story