மத்திய அரசை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியல்


மத்திய அரசை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்வுகளையும் புறக்கணித்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு கட்சியினர், வணிகர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை, ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் கல்லூரி வாசலில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல்அறிந்ததும் தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் சரபோஜி கல்லூரி அருகே உள்ள விடுதி மாணவர்களும் நேற்று விடுதி முன்பு சாலை ஒரத்தில் உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். 

Next Story