பிளஸ்-2 மாணவரை ஆக்சா பிளேடால் குத்திய சக மாணவர் கைது
மாங்காடு அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவரை ஆக்சா பிளேடால் குத்திய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த பட்டூரை சேர்ந்தவர் சேக்ஜமீல். இவருடைய மகன் சேக்சமீருதீன் (வயது 17). இவர், மாங்காடு அடுத்த கோவூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்றுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது.
சேக்சமீருதீன் தேர்வு எழுதி விட்டு மதியம் வகுப்பறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருடன் ஒன்றாக படிக்கும் 18 வயது சகமாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடால் சேக்சமீருதீன் வயிற்றில் குத்தினார். இதை பார்த்த சக மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.
வயிற்றில் ஆக்சா பிளேடு பாய்ந்த நிலையில் வலியால் அலறி துடித்தபடி பள்ளியின் வாயில் முன்பு சேக்சமீருதீன் சுருண்டு விழுந்தார். அங்கு நின்று கொண்டிருந்த அவரது பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொதுத்தேர்வு நடைபெற்று வந்ததால் அரசு பள்ளியின் முன்பு மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள், சேக்சமீருதீனை குத்தி விட்டு தப்பி ஓடிய மாணவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர், பள்ளியின் பின்புறமாக தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாணவரை கைது செய்தனர். விசாரணையில், மாணவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்து உள்ளது. அதில் பழி தீர்க்க தேர்வின் கடைசி நாள் வரை காத்திருந்து, சேக்சமீருதீனை ஆக்சா பிளேடால் குத்தி இருப்பதும், இதற்காக ஆக்சா பிளேடை கூர்மையாக தீட்டி நேற்று காலையில் பள்ளிக்கு வரும்போது எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் மறைத்து வைத்து இருந்ததும் தெரியவந்தது.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story