தலோஜாவில் தொழிற்சாலைகளுக்கு 25 சதவீதம் தண்ணீர் வெட்டு


தலோஜாவில் தொழிற்சாலைகளுக்கு 25 சதவீதம் தண்ணீர் வெட்டு
x
தினத்தந்தி 6 April 2018 11:28 PM GMT (Updated: 6 April 2018 11:28 PM GMT)

நவிமும்பை தலோஜாவில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மும்பை,

தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் வாஷி கழிமுக பகுதியில் கலக்கின்றன. ரசாயன கழிவுகளின் காரணமாக கழிமுகத்தில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலோஜா தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் தண்ணீாில் 25 சதவீதம் குறைக்க தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது. 

Next Story