திம்மாபுரத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு


திம்மாபுரத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 April 2018 4:00 AM IST (Updated: 8 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 23 ஏக்கர் நில பரப்பில் பண்ணை உள்ளது. இங்கு தென்னை, கொய்யா, மா உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள், ஒட்டு செடிகளும் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இங்கு பசுமை குடில் அமைத்து தக்காளி, கத்தரி உள்ளிட்டவைகள் தரும் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் தோட்டகலைத்துறை திட்ட இயக்குனர் சுப்பையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி அவர் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டார். அப்போது இணை இயக்குனர் கண்ணன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராம கவுண்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

அப்போது தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாங்காய்களை விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும், பண்ணைக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ஆய்வின் போது தோட்டகலைத்துறை திட்ட இயக்குனர் கூறியதாவது:- காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட பழமை வாய்ந்த இந்த பண்ணைக்கு விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது தோட்டகலை உதவி இயக்குனர் ராஜேந்திரன், தோட்டகலை அலுவலர் அருள் முருகன், உதவி தோட்டகலை அலுவலர் சுரேஷ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட மகளிரணி தலைவி பெருமா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story