துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு: படகு-கட்டுமரங்களில் வந்து கடல் முற்றுகை போராட்டம்
கன்னியாகுமரி அருகே துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படகு, கட்டுமரங்களில் வந்து கடல் முற்றுகை போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் இனயத்தில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அங்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும், மணக்குடிக்கும் இடையேயான கடல் பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அங்கு துறைமுகம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
இதனால் கன்னியாகுமரி அருகே படகுகளில் வந்து கடல் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை 9 மணி அளவில் கன்னியாகுமரி முதல் கீழ மணக்குடி வரை உள்ள கடல் பகுதியில் கடல் முற்றுகை போராட்டம் தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் படகுகளிலும், கட்டு மரங்களிலும் கடல் மார்க்கமாக கன்னியாகுமரி அருகே கோவளம் கடல் பகுதிக்கு வந்தனர். ஒவ்வொரு படகையும், கட்டுமரத்தையும் அருகருகே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது படகுகளில் கருப்பு கொடி கட்டியிருந்தனர். கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். படகுகளில் இருந்த சிலர் மேளம் அடித்து கோஷங்களை எழுப்பினர்.
அதே நேரத்தில் கோவளம் முதல் கீழ மணக்குடி வரை உள்ள கடற்கரை பகுதிகளிலும் கருப்பு கொடிகளை கட்டியிருந்தனர். போராட்டத்துக்கு திரளாக வந்த பெண்கள் கடற்கரையில் நின்று, கடலில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
இதற்கிடையே துறைமுகத்துக்கு எதிராக முகிலன் குடியிருப்பு பகுதியில் உள்ள கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபா தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தசாரதி, சம்சுதீன், முருகேசன், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பச்சைமால் மற்றும் நிர்வாகிகள், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் பங்குத்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கியதும், கோவளத்தில் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து படகுகளும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்து, கடலில் அணிவகுத்து நின்றன. இதேபோல் கோவளம் பகுதியில் திரண்டிருந்த பெண்களும் அங்கிருந்து கடற்கரை வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பேசியதாவது:-
குமரி மாவட்ட மக்களை பிரித்து அரசியல் லாபம் பெற்று விடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த போராட்டம் பாடம் கற்று கொடுத்துள்ளது. எந்த கடவுளை வணங்கினாலும் வாழ்கின்ற இடத்தில் உள்ள அனைவரையும் சகோதரர்களாக பார்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்றுத்தந்ததை நாம் உணர்ந்து இருக்கிறோம்.
நாம் அனைவரும் இணைந்து நாகர்கோவிலில் குழுமியிருந்தால் நாகர்கோவில் மட்டும் அல்ல, குமரி மாவட்டமே ஸ்தம்பித்து இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இதோடு நின்று விடுவது இல்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம். நாம் இயற்கையை பாதுகாப்பதற்கு துணிந்தவர்கள் என்பது தான் உண்மை. யாரோ ஒரு சில நிறுவனங்களுக்கு இந்த இடங்களை தாரை வார்த்து கொடுத்துவிட்டால், சன்மானம் கிடைக்கும் என்பதற்காக மக்கள் வாழ்விடங்களை அழிக்க துணிந்திருக்கிறார்கள்.
எங்களது போராட்டங்கள் அனைத்தும் நியாயமும், நீதியும் கொண்டது. தமிழகத்தில் எங்கெல்லாம் மண்ணுக்காகவும், தண்ணீர் உரிமைக்காகவும், இயற்கையை காப்பாற்றுவதற்காகவும் போராடுகிறார்களோ அவர்களுடன் நாமும் உணர்வு பூர்வமாக இணைந்து இருக்கிறோம். ஸ்டெர்லைட், கதிராமங்கலம் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் போராடும் அனைத்து மக்களுடனும் நாம் இணைந்து உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.
மதியம் 1 மணி அளவில் போராட்டம் நிறைவு பெற்றதும் அங்கிருந்து படகுகள் புறப்பட்டு செல்ல தொடங்கின. கடற்கரையில் திரண்டிருந்த மக்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.
போராட்டத்தையொட்டி நாகர்கோவில் உள்பட முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று குறும்பனை கிராமத்தில் மீனவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குறும்பனை பங்குத்தந்தை கஸ்பார் தலைமை தாங்கினார். துணை பங்குத்தந்தை ஜார்ஜ், பங்கு பேரவை துணை தலைவர் ராஜப்பன், செயலாளர் ஜெரின், இணை செயலாளர் ஸ்டார், தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடல் முற்றுகை போராட்டத்தையொட்டி நேற்று கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், புதுக்கிராமம், கீழ மணக்குடி உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story