நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் வெட்டிக்கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலைக்கு முயற்சி
தாரமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் வெட்டிக்கொலை, போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை நாகிரெட்டியூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவேரி (60). இவர்களுக்கு குமார்(35) என்ற மகனும், காயத்ரி(22) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. குமார் தனது பெற்றோர் வீட்டின் அருகிலும், காயத்ரி மேட்டூர் அருகே சென்ரெட்டியூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர். பெருமாள் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பெருமாளுக்கு தனது மனைவி காவேரி நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் அவர்களிடையே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். 8 இடங்களில் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்த காவேரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் செய்வதறியாது திகைத்த பெருமாள் போலீசாருக்கு பயந்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கினார். இதற்கிடையே சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த குமார் பதறியடித்து ஓடி வந்தார். வீட்டில் தாய் காவேரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஷம் குடித்ததில் மயங்கிய நிலையில் கிடந்த பெருமாளையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உத்தரவின் பேரில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story