காவிரி பிரச்சினை: கடையடைப்பு இல்லாத எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவளிப்போம்
காவிரி பிரச்சினையில் கடையடைப்பு இல்லாத எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவளிப்போம் என்று தஞ்சையில் விக்கிரமராஜா கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் செந்தில்நாதன், மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் புதுகை சேகர், வடக்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் சத்தியநாராணன், பொருளாளர்கள் பாஸ்கரன், கணேசன், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி கடையடைப்பு நடத்திய வணிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தஞ்சை மாநகரை ஸ்மார்ட் சிட்டி நகரமாக தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, தஞ்சை மாநகரை நவீன படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் போது மாநகராட்சி வணிகவளாகங்கள், காமராஜர் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் ஆகியவற்றில் பணிபுரியும் எந்த ஒரு வணிகரும் பாதிக்காத வகையில் மாற்று இடம் இப்போது உள்ள வாடகை மற்றும் மீண்டும் அதே இடத்தில் கடைக்கான உறுதி செய்யப்பட்ட அரசாணை வேண்டும். மேலும் மாநகராட்சி கடைகளை ஒப்படைக்க 1 ஆண்டுகாலம் அவகாசம் வழங்க வேண்டும்.
மின்வசதி, குடிநீர்வசதி, கழிப்பிடவசதி இல்லாமல் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகளை முறைப்படுத்த வேண்டும். சென்னையில் மே 5-ந்தேதி நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் கடையடைப்பு இல்லாமல் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், பகுதி சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story