ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை இழுத்து மூடி பெற்றோர் போராட்டம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் இரு ஆசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை இழுத்து மூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 35 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியை மற்றும் 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இங்கு ஒரு ஆசிரியர் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு தொடர்ந்து வராமல், கல்விச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இது குறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கல்வித்துறை அலுவலர்களுக்கு பல முறை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரம் மோசம் அடைந்ததையடுத்து தலைமை ஆசிரியையிடமும் இது குறித்து முறையிட்டுள்ளார்கள். அவரும் இதனை கண்டுகொள்ளவில்லை. தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் மற்றொரு ஆசிரியை ஆகியோர் பள்ளியின் வளர்ச்சிக்கு குந்தகமாக இருப்பதாக தொடர்ந்து புகார் கூறிவந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமுற்ற பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆசிரியர்களை கண்டித்து நேற்று பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டுவிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து உடனடியாக சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ராமநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரன், கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு வந்து திரண்டு இருந்தோரிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது. 450 பிள்ளைகள் படித்த பள்ளிக்கூடம் 35 பேரில் வந்து நிற்கிறது. தினமும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் 10 மணிக்கு மேல் வருகிறார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் மாணவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 3-ம் பருவத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் ஆங்கில பாடத்தில் முதல் பாடமே நடத்தி முடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தலைமை ஆசிரியை உள்பட மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்ய கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவதாக தாசில்தார் ராமநாதன் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர். பள்ளி வாசலில் அமர்ந்து இருந்த மாணவ- மாணவிகள் பிற்பகலில் பள்ளிக்குச் சென்றனர்.

Related Tags :
Next Story