காவிரி நீர் பிரச்சினைக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
காவிரி நீர் பிரச்சினைக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சேலத்தில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்ட நினைப்பது சரியாக இருக்காது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட செயல் திட்டத்தை மே 3-ந் தேதிக்கு முன்பாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராடினார்கள். அதனால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது. அதேபோல் 8 கோடி மக்களின் ஜீவாதார பிரச்சினை காவிரிநீர் என்பதால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அப்போது தான் இங்கு நடக்கும் பிரச்சினை உலக அளவில் தெரியும். இதன் மூலம் காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருப்பதால் 16-ந் தேதி நாமக்கல்லில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு விரைவில் வரும். அதில் நிச்சயம் நீதி வெல்லும்.
தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் தான் போராட்டம் நடத்தினர். இது அனைத்துக்கட்சி போராட்டம் கிடையாது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தனித்தனியாக போராட்டம் நடத்தி வருகின்றன. 1½ கோடி தொண்டர்கள் உள்ள நாங்களும் இதற்காக போராடி வருகிறோம். இந்த போராட்டத்திற்கு தமிழக பா.ஜனதாவும் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் மிரட்டி வருவது சரியில்லை.
அவர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து கட்சியை வளர்க்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 33 அமைச்சர்கள், 100 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. குக்கர் தான் வெற்றி பெற்றது. அதனால் தான் எங்களை கண்டு முதல்-அமைச்சர் பயப்படுகிறார். பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.

Related Tags :
Next Story