நெல்லை-தூத்துக்குடியில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம் பகலிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
ஆனால், சிறிது நேரத்தில் நிலைமை மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டதால் நகரை இருள் சூழ்ந்தது. பின்னர் லேசான மழை பெய்தது. இதே போல் நெல்லை மாவட்டத்தில் சிவகிரி, சேரன்மாதேவி உள்பட ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் நெல்லையில் நேற்று வெப்ப நிலை குறைந்து, இதமான குளிர்ந்த காற்று வீசியது.
இந்த மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒருசில அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பாபநாசம் காரையாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12.48 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நேற்று காலை தண்ணீர் வரத்து வினாடிக்கு 121 கன அடியாக அதிகரித்தது. மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 134 கன அடியில் இருந்து 302 கன அடியாக உயர்ந்துள்ளது. இதே போல் சேர்வலாறு அணைக்கு 28 கன அடி தண்ணீர் வந்தது.
பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 55 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -16, சேர்வலாறு -2, மணிமுத்தாறு -8, குண்டாறு -4, அம்பை -22, ஆய்குடி -2, சேரன்மாதேவி -10, பாளையங்கோட்டை -3, சங்கரன்கோவில் -12, செங்கோட்டை -2.
நேற்று பகல் நேரத்தில் நெல்லையில் 8 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டரும், சேரன்மாதேவியில் 4 மில்லி மீட்டரும், சிவகிரியில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் திடீரென மேகம் திரண்டு வந்தது. பின்னர் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
நேற்று காலையிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக கீழஅரசடியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது தவிர சூரங்குடி 2 மில்லி மீட்டர், சாத்தான்குளம் 13 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 10 மில்லி மீட்டர், தூத்துக்குடி 7.1 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story