கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.10 லட்சம் கிடைத்தது


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.10 லட்சம் கிடைத்தது
x
தினத்தந்தி 12 April 2018 4:00 AM IST (Updated: 12 April 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் காணிக்கையாக ரூ.10 லட்சம் கிடைத்தது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாடு, வெளிநாட்டு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

ரூ.10 லட்சம்

குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சித்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், அறநிலையத்துறை ஆய்வாளர் ஆனந்த், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன், முன்னாள் தலைமை கணக்கர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பணியில் குமரி மாவட்ட திருக்கோவில் பணியாளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் மற்றும் மாணவ– மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். இதில் 10 லட்சத்து 46 ஆயிரத்து 966 ரொக்கபணமும், 129 கிராம் தங்கம், 67 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களும் கிடைத்தன.


Next Story