தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு, மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர், பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியை கட்சி அலுவலகத்தில் கட்டினார். மேலும் அவர், கருப்பு துண்டு மற்றும் சட்டையில் கருப்புபட்டை அணிந்திருந்தார்.
இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
காவிரி பிரச்சினையில் 45 நாட்கள் அவகாசம் அளித்த நிலையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடைசி நாளில் ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டைநாடி உள்ளது. மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு மே மாதம் 3-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு விட்டது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வரு கிறது. இதனால் தமிழகம் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. தமிழக கவர்னரும் தமிழக மக்களுக்கு விரோத செயல்களில் ஈடுபடுகிறார். 3 முக்கிய பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு உள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருவதால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசும், மத்திய பாரதீய ஜனதா அரசின் கருவியாக செயல்பட்டு வருகிறது.
கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய நிதி விவகார ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. காவிரி மீட்பு குழு சார்பில் 2 குழுக்களாக பிரிந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் போராட்டத்தில் யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். கோவையில் சில இடங்களில் கட்டப்பட்டு இருந்த கருப்புக்கொடியை போலீசார் அப்புறப்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
அப்போது முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story