பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி கட்டி போராட்டம்
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தி.மு.க.வினர் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றும், அன்றைய தினம் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் நேற்று கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
கரூர் பகுதியில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நகர செயலாளர்கள் கனராஜ், கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், தாந்தோணி ஒன்றிய செயலாளர் எம்.ரகுநாதன், கரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜ்கண்ணு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டியும், கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கரூர் மாவட்ட கலைஞர் அறிவாலயம் அருகில் கருப்பு கொடியும், கருப்பு பலூனும் கட்டி தொங்கவிடப்பட்டன.
குளித்தலை நகர தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பொதுமக்களுக்கு கருப்பு பட்டை அணிவித்தனர். மேலும் தி.மு.க. கட்சி கொடி கம்பத்தில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கு நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா முன்னிலை வகித்தார். குளித்தலை நகரத்திற்கு உட்பட்ட பெரியபாலம், பஸ் நிலையம், சுங்கவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிவித்தனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவருக்கும் தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கரூர் அமராவதி பாலம், பசுபதிபாளையம் பாலம், ஐந்து ரோடு, கரூர் பஸ்நிலையம், தரகம்பட்டி, குருணிகுளத்துப்பட்டி, ரெட்டியபட்டி, மைலம்பட்டி, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளைம், நொய்யல், தோகைமலை, உப்பிடமங்கலம், புலியூர், வெள்ளியணை ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தின் பல இடங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story