மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை


மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோர்ட்டு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வக்கீல்கள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதில் தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், வக்கீல்கள் நல்லதுரை, சத்தியமூர்த்தி, பாலகிருஷ்ணன், முத்துமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி கோர்ட்டு சாலை, காந்திஜி சாலை, ரெயிலடி வழியாக தஞ்சை தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. பின்னர் அவர்கள் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மீண்டும் வக்கீல்கள் அதே வழியாக ஊர்வலமாக வந்து கோர்ட்டு வளாகத்தை அடைந்தனர். மேலும் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


Next Story