குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஓடை கால்வாய்களில் நீர் உறிஞ்சும் உறை கிணறுகள் அமைப்பு
குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நிலத் தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் செல்லும் ஓடை கால் வாய்களின் நடுவே நீர்உறிஞ்சும் உறை கிணறு கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
அடுக்கம்பாறை,
கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக் கிறது. குறிப்பாக, வறண்ட மாவட்டமாக இருக்கும் வேலூர் மாவட்டத்திலும் தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டு களாக பருவமழை பொழிந்த நிலையிலும், அதனை நாம் சேமிக்க தவறியதே குடிநீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர் கள் கூறுகின்றனர்.
குடிநீர் பிரச்சினை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக ஏரிகள் மற்றும் குளம், குட்டைகள் தூர்வாருவதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மழைநீர் சேக ரிப்புத் திட்டத்தையும் பெய ரளவில் மட்டுமே செயல் படுத்தப்பட்டு, அதனை முறை யாக பின்பற்றவில்லை என் பதும் மிகப்பெரிய குற்றச் சாட்டாகும்.
நீர்உறிஞ்சும் உறை கிணறு
நிலத்தடி நீர்மட்டம் அதிக ளவில் குறைந்து, குடிநீர் பிரச் சினை ஏற்படும் இக்கட்டான சூழலில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவுக்கு மேலுயர்ந்து காணப்படுகிறது. கணியம் பாடி வட்டாரத்தில் உள்ள மழைநீர் கால்வாய்கள், ஓடைகளின் நடுவே நீர் உறிஞ்சும் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய்கள் மற்றும் ஓடைகளின் நடுவே மழைநீர் சேகரிப்புத் திட்டம் போலவே சுமார் 10 அடிக்கு பள்ளம் தோண்டப்படுகிறது. அந்தப் பள்ளங்களில் ஜல்லிகள் மற்றும் கூழாங்கற்கள் நிரப்பி வைக்கப்படுகின்றன. உறை கிணறு அமைக்கப்பட்ட 10 மீட்டர் இடைவெளியில் தண்ணீர் தேங்குவதற்கு கட்டு கற்களை கொண்டு சிறிய தடுப்பணை ஒன்று அமைக்கப் படுகிறது.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு, கணியம்பாடி வாழும் கலை அமைப்பின் இயக்குனர் சந்திரசேகரன் மூலம் இந்த நீர்உறிஞ்சும் உறை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இது குறித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிக்கும் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
கணியம்பாடி வட்டாரத்தில் கம்மவான்பேட்டை, கீழ் அரசம்பட்டு, துத்திக்காடு, சோழவரம், கணியம்பாடி, காட்டுப்புத்தூர் உள்ளிட்ட 21 ஊராட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட இடங் களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. பணியில் ஈடுபடும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள முழு கூலித்தொகையும் வழங்கப் படுகிறது.
வெற்றியடைந்துள்ள இந்தத் திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட ஒன்றியங்களிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நாட்டறம்பள்ளியில் உள்ள அப்பர் பாலாற்றில் (சரஸ்வதி பாலாறு) தும்பேரி, பொத்தூர், பச்சூர், மல்ல குண்டா, ராமநாயக்கன் பேட்டை உள்ளிட்ட கிராமங் களில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து திருவண்ணா மலை மாவட்டத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. அதில் கொங்கராம் பட்டு கிராமத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கோவை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நீர் உறிஞ்சும் உறை கிணறுகள் அமைப் பதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக வாழும் கலை அமைப்பின் இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.

Related Tags :
Next Story