பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலஇடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தர்மபுரி,
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்றும், தி.மு.க.வினர் வீடுகள், கடைகள், தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதன்படி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றினர். பொது இடங்கள், கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றி பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏற்றியும், கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்டம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
தர்மபுரியில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கருப்புகொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் தி.மு.க. கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரமோகன், டாக்டர் ஜெகன், மாவட்ட நெசவாளர் அணி நிர்வாகி காசிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரகீம், மாவட்ட வர்த்தகர் அணி நிர்வாகி சுகுமார், நிர்வாகிகள் சாதிக், மாதையன், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில், தி.மு.க.வினர் அதியமான்கோட்டையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு கருப்பு கொடிகளை ஏற்றி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும் தி.மு.க.வினர், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள உள்ள பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தடங்கம் கிராமத்தில் உள்ள தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி வீடு மற்றும் அவரது கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வீடுகள், முக்கிய இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் இதில் பங்கேற்றனர்.
இதேபோன்று காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பெரும்பாலான ஊர்களில் தி.மு.க.வினர் கடைகள், தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை கோட்டை பகுதியில் இருந்து கருப்பு கொடி ஏந்தியவாறும், கருப்பு சட்டை அணிந்தும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். பின்னர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசு துரை, நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Related Tags :
Next Story