வறண்டு கிடக்கும் பண்ணை குட்டைகளை தூர்வாரி மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
சிவகங்கை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் பண்ணை குட்டைகளை தூர்வாரி விவசாயிகள் மழைக்காக காத்துக்கிடக்கின்றனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் மழை நீரை சேமிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. மேலும் இந்த பண்ணை குட்டைகள் அமைப்பதற்காக மானியமும் வழங்கி வருகிறது.
விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்தால் அதற்கு மானியமும் பண்ணை குட்டையில் மழை நீரை சேமித்து மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் மேற்கொண்டால் அதற்கும் மானியமும் வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டு காலமாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் மானாமதுரை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்த பண்ணை குட்டைகள் அனைத்தும் வறண்ட நிலையில் தற்போது காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மீன்வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு சில விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இந்த பண்ணை குட்டைகளை தூர்வாரி விட்டு இந்த ஆண்டு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மானியம் வழங்கினால் வரும் காலத்தில் பெய்யும் மழையை வைத்து மீன் வளர்ப்பில் ஈடுபடவும் விவசாயிகள் ஆர்வமுடன் உள்ளனர்.
இது குறித்து மானாமதுரையை அடுத்த கிளங்காட்டூரைச் சேர்ந்த விவசாயி காந்தி என்பவர் கூறியதாவது:– மழை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறேன். கடந்த வருடம் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு ஓரளவிற்கு லாபம் கிடைத்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இப்பகுதியில் உள்ள பண்ணை குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. இந்த பண்ணை குட்டைகளை தூர் வாரவும், மீன் வளர்க்கவும் மாவட்ட நிர்வாகம் உதவி செய்தால் வரும் மழை காலங்களில் இந்த தொழிலை விரிவுப்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story