பெரம்பலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் 5 நாட்களில் 10,942 பேர் பங்கேற்றனர்
பெரம்பலூரில் நடந்துவரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 5 நாட்களில் 10,942 பேர் பங்கேற்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலுார் மாவட்டத்தில் பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 10-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் சேர்க்கும் இந்த முகாம் இம்மாதம் 24-ந்தேதி வரை நடக்கிறது. முகாமில் முதல் நாளில் 1,450 பேரும், 2-வது நாளில் 1,929 பேரும், 3-வது நாளில் 2,503 பேரும், 4-வது நாளில் 2536 பேரும் கலந்துகொண்டனர்.
5-வது நாளான நேற்று அரியலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2,524 பேர் கலந்து கொண்டனர். இதுவரை 10,942 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இம்முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு அடிப்படை உயரத் தேர்வும், 1.6 கி.மீட்டர் தூரத்தை 5.45 நிமிடங்களில் கடப்பதற்கான ஓட்ட போட்டி, புல்-அப்ஸ் எடுத்தல், நீளம் தாண்டுதல், இசட் வடிவிலான கட்டையின் மீது வேகமாக செல்வது என்பன உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் தினமும் அதிகாலை 3 மணிமுதல் 6 மணிவரை நடத்தப்பட்டு, பயோ மெட்ரிக் முறையில் அவர்களது கை ரேகைகள் அங்க அடையாளம் பதிவு செய்து, உயரம், எடை பதிவு செய்யப்பட்டது.
இதில் தேர்வானவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்தும் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ராணுவ ஆட்கள் சேர்ப்பு முகாமை ஒட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி, விளையாட்டு ஆயத்த பயிற்சிக்கும், இருசக்கர, இலகு ரக வாகனங்கள் செல்வதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல புதிய உள்விளையாட்டு அரங்கம் முதல் கலெக்டர் அலுவலக சுற்றுச்சாலை வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சிக்கு செல்பவர்கள், மாணவிகள் விளையாட்டு விடுதி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் கலெக்டராக டாக்டர் தரேஸ்அகமது இருந்தபோது முதல்முறையாக ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் பிரமாண்ட முறையில் நடந்தது. தற்போது 2-வது முறையாக பெரம்பலூரில் இந்த முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story