பழக்கடை உள்பட 2 கடைகளில் 200 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 வியாபாரிகள் கைது
மார்த்தாண்டம் அருகே பழக்கடை உள்பட 2 கடைகளில் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும்.
ஆனால் அந்த நேரத்தில் சிலர் குடிபோதையில் நடமாடியதை போலீசார் கண்டனர். இதனால் மதுபாட்டில்களை வைத்து வேறு இடத்தில் விற்பனை நடைபெறுகிறதா? என்று போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது கழுவன் திட்டையில் உள்ள ஒரு டீக்கடையிலும், ஒரு பழக்கடையிலும் மது விற்பனை நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த 2 கடைகளிலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் 2 கடைகளிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 205 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த களியக்காவிளை எள்ளுவிளையை சேர்ந்த பழ வியாபாரி ராஜகோபால் (வயது 40) மற்றும் டீக்கடையில் இருந்த பாகோடு கொட்டாரவிளையை சேர்ந்த நாகமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story