உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
நிலத்தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள தெற்கு சித்தாம்பூர் குடித்தெருவை சேர்ந்தவர் ஜெயமணி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 60). இவர்களுக்கு தங்கமணி(வயது 45), ராம்குமார் (33) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (54) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் நிலத்தகராறு ஏற்பட்டது.
அப்போது நாகராஜ், அவரது தம்பி ராஜரத்தினம்(36), நாகராஜ் மகன்கள் ரஞ்சித்குமார்(26), ஒரு சிறுவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 6 பேர் சேர்ந்து அங்கம்மாள் மற்றும் தங்கமணி, ராம்குமார் ஆகியோரை உருட்டு கட்டைகளால் தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
பெண் சாவு
இதுகுறித்து வாத்தலை போலீசில் ராம்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நாகராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து வாத்தலை போலீசார் இச்சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story