காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2018 11:00 PM GMT (Updated: 16 April 2018 9:12 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பரமத்திவேலூரில் அனைத்து பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பரமத்தி வேலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ராஜா, கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால் பாசன விவசாயிகள் என அனைத்து பாசன விவசாயிகள் சங்கத்தினர் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார்.

செயலாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். நன்செய் இடையாறு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ராஜா வாய்க்கால் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாவு, பொத்தனூர் விவசாயிகள் சங்கத்தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 17 கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் மாயாண்டிக்கவுண்டர், கபிலர்மலை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் நெடுஞ்செழியன், மாவட்ட உழவர் உழைப்பாளர் கட்சி செயலாளர் குப்புதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கொமராபாளையம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் மன்மதன் நன்றி கூறினார். 

Next Story