காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்-ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சி யினரும் பங்கேற்றனர்.
கோட்டைப்பட்டினம்,
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு பேராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஆட்டோ ஓட்டினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஊர்வலமாக வந்தனர்.
இதில் மணமேல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனியார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அலிஅக்பர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் அலி, நாம் தமிழர் கட்சி டேவிட், விடுதலை சிறுத்தை கட்சி கதிர்வளவன், சமூக பேரவை தலைவர் தாஜுதீன், மீனவ பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முகமது சாலிகு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story