கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 14 பேர் பணி இடமாற்றம்; மாநில அரசு உத்தரவு


கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 14 பேர் பணி இடமாற்றம்; மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 14 பேரை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசு 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 14 பேரை பணி இடமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன் விவரம் வருமாறு:-

* பெங்களூருவில் உள்ள மைசூரு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்ட நவீன்ராஜ் சிங், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* நில அளவீடு மற்றும் நில ஆவண பிரிவு கமிஷனராக பணியாற்றும் முனீஸ் மவுட்ஜில், கலால்துறை கமிஷனராக செயல்படுவார்.

* தொழில் மற்றும் வணிகம், தொழில் துறை வளர்ச்சி பிரிவு கமிஷனராக செயல்பட்டு வரும் டர்பன் ஜெயின், மைசூரு கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் நகரசபை நிர்வாக இயக்குனராக பணியாற்றும் விஷால், துமகூரு மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.

* பெங்களூருவில் தேசிய கிராம நலவாழ்வு திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் அனிருத் சிரவான், பீதர் மாவட்ட கலெக்டராக செயல்படுவார்

* கர்நாடக நகர தரவு கூட்டமைப்பின் இணை இயக்குனராக செயல்பட்டு வரும் பொம்மலா சுனில்குமார், பெங்களூரு மகாதேவபுரா மண்டலத்தின் இணை கமிஷனராகவும், பெங்களூரு மாநகராட்சியின் வடக்கு பிரிவு ஏ.டி.இ.ஓ.வாகவும் செயல்படுவார்.

* பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக செயல்பட்டு வரும் நிதிஷ் பட்டீல், பெங்களூரு தெற்கு மண்டலத்தின் இணை கமிஷனராகவும், பெங்களூரு மாநகராட்சியின் தெற்கு பிரிவு ஏ.டி.இ.ஓ.வாகவும் செயல்படுவார்.

* பாகல்கோட்டையில் பத்ரா மேல் அணை திட்டத்தின் பொது மேலாளராக இருக்கும் நளினி அதுல், பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாக பிரிவு கூடுதல் கமிஷனராகவும், பெங்களூரு மாநகராட்சியின் மத்திய பிரிவு ஏ.டி.இ.ஓ.வாகவும் செயல்படுவார்.

கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் பணி காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவக்குமார், பெங்களூருவில் உள்ள மாநில போலீஸ் தலைமையத்தின் மனித உரிமைகள் மற்றும் பொதுமக்களின் குறைகேட்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாக செயல்படுவார்

* பெங்களூருவில் உள்ள மாநில போலீஸ் தலைமையகத்தின் மனித உரிமைகள் மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாக செயல்பட்டு வரும் ராமசந்திர ராவ், பெங்களூருவில் “சிவில் ரைட்ஸ்“ அமலாக்கத்துறை இயக்குனராக செயல்படுவார்.

* பெங்களூருவில் ஊழல் தடுப்பு படையில் ஐ.ஜி.பி.யாக இருக்கும் சந்திரசேகர், பெலகாவி நகர கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக இருக்கும் விபுல்குமார், மங்களூரு நகர கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெலகாவி நகர கமிஷனராக இருக்கும் ராஜப்பா, பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு பிரிவில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* தாவணகெரே(கிழக்கு மண்டலம்) ஊழல் தடுப்பு படை சூப்பிரண்டாக செயல்பட்டு வரும் வம்சி கிருஷ்ணா, பாகல்கோட்டை மாவட்ட சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story