உடல் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் எரித்து கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
சேதுபாவாசத்திரம் அருகே உடல் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அடைக்கத்தேவன் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அம்மணிசத்திரம் பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் ரமணிக்குதகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story