நீர்நிலைகளில் இலவசமாக மண் அள்ள அனுமதி கலெக்டர் சாந்தா தகவல்
நீர்நிலைகளில் இலவசமாக மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று என்று கலெக்டர் சாந்தா கூறியுள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் விவசாயிகள் தங்களின் சொந்த உபயோகத்திற்கு மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரிப்பு ஆகியவற்றுக்கு அரசு விதிகளின்படி அந்தந்த பகுதி தாசில்தாரிடம் மனு அளித்து மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
மண் எடுக்க விரும்புபவர்களின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம், வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடம், அதே வருவாய் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மண்ணின் அளவு நஞ்சை நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டரும், புஞ்சை நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டரும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு மண் எடுக்க 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டரும், மண்பாண்டம் தயாரிக்க 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் மண் எடுத்துக்கொள்ளலாம்.
முன்அனுமதி
மேலும், அடங்கலின்படி விண்ணப்பதாரருக்கு சொந்தமான நிலம் அல்லது விவசாயம் செய்யும் குத்தகைதாரர் என்பதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும். கனிமம் இலவசமாக பெற முன் அனுமதி பெற வேண்டும். அதன்படி அனுமதியானது 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Tags :
Next Story