தொழில்அதிபரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடி மும்பையை சேர்ந்த இருவர் கைது
ரூ.30 லட்சம் மோசடி மும்பையை சேர்ந்த இருவர் கைது, அதற்கு உடந்தையாக செயல்பட்ட வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 4 பேரும் சிக்கினர்.
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த தொழில்அதிபரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்ததாக மும்பையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக செயல்பட்ட வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 4 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூருவில் வசித்து வரும் தொழில்அதிபர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள், ‘நாங்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் செயல்பட்டு வரும் கால்நடை சிகிச்சைக்கான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஆயுர்வேத விதைகளை விற்பனை செய்து வருகிறோம். இந்த நிறுவனம் சார்பில் இந்தியாவில் கிளை திறக்கப்பட உள்ளது. இதில், உங்களை பங்குதாரராக சேர்க்க விரும்புகிறோம். இதன்மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்‘ என்று கூறியுள்ளனர்.
இதை கேட்ட தொழில்அதிபர், 2 பேரையும் நேரில் சந்தித்தார். அப்போது, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அவர் ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தார். நீண்ட நாட்கள் ஆனபோதிலும் அவர்கள் 2 பேரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் செல்போன்களும் ‘சுவிட்ச்-ஆப்‘ செய்யப்பட்டன. அப்போதுதான் அவர்கள் தன்னிடம் மோசடி செய்துவிட்டதை தொழில்அதிபர் உணர்ந்தார்.
இதுகுறித்து, அவர் பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்ததாக மும்பை மிரா ரோட்டில் வசித்து வரும் ஆகாஷ் கோனி(வயது 39) மற்றும் ஜோஷிஸ்வரி பகுதியை சேர்ந்த ரங்காத் புரான்(42) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஒடிசாவை சேர்ந்த சேத்தன் சர்மா(29), உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமீம் அகமது(36), காங்கோ நாட்டை சேர்ந்த துபுடி முகாதி ஜீன்(25), நைஜீரியாவை சேர்ந்த பிலிப் ஒபிஇமி(30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டை சேர்ந்த 2 பேரும் மாணவர் விசாவில் இந்தியா வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இணையதளத்தில் போலியாக விளம்பரங்கள் செய்து தொழில்அதிபர்களை மோசடி வலையில் சிக்க வைப்பதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், 6 ஏ.டி.எம். கார்டுகள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story