சாலை சீரமைப்பு பணியின் போது கியாஸ் பைப்-லைன் உடைந்து தீ விபத்து
தானேயில் சாலை சீரமைப்பு பணியின்போது, கியாஸ் பைப்-லைன் உடைந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் எரிந்து நாசமானது.
தானே,
தானே ஹிராநந்தானி எஸ்டேட் பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது பூமிக்கடியில் புதைக்கப்பட்டு இருந்த சமையல் கியாஸ் பைப்-லைன் எதிர்பாராதவிதமாக உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் வெளியாகி கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ பொக்லைன் எந்திரத்தின் மீதும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். இதுபற்றி தீயணைப்பு படையினர் மற்றும மகாநகர் கியாஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மகாநகர் கியாஸ் நிறுவன ஊழியர்கள் கியாஸ் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பொக்லைன் எந்திரம் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து தானே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story