சட்டசபை தேர்தலையொட்டி அமித்ஷா இன்றும், நாளையும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம்


சட்டசபை தேர்தலையொட்டி அமித்ஷா இன்றும், நாளையும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 18 April 2018 4:00 AM IST (Updated: 18 April 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலையொட்டி அமித்ஷா இன்றும், நாளையும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அமித்ஷா இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு அமித்ஷா பசவ ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூரு பசவேஸ்வரா சர்க்கிளில் உள்ள பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறுகிறார்.

பின்னர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பிறகு பா.ஜனதாவின் மண்டல பொறுப் பாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு ஒசக்கோட்டைக்கு சென்று கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்று இரவு பெங்களூருவில் தங்கும் அமித்ஷா, நாளை பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து அங்கு தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதிலும் அமித்ஷா கலந்து கொள்கிறார். இந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு அவர் தேவனஹள்ளிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதை முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பும் அமித்ஷா, கர்நாடகத்தில் வசிக்கும் குஜராத் மாநில மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மாலை 6 மணிக்கு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் பெங்களூருவில் கலந்துரையாடல் நடத்துகிறார். அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story