பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.27 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சாந்தா தகவல்


பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.27 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.27 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன என்று கலெக்டர் சாந்தா கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி யானது வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் நலன் சார்ந்த கட்டிடங்கள், கால்நடை பரா மரிப்பு கட்டிடங்கள், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், விதைப்பண்ணைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல பணிகளுக்கும், கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும், பொதுப்பயன்பாட்டிற்கு உதவும் வகையில் குடிநீர் வசதி, சுகாதாரம், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட 38 வகையான பணிகளுக்கு கடனுதவி வழங்கி வருகின்றது.

அதன்படி நபார்டு வங்கி கடன் உதவி மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.27 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் வி.களத்தூரில் கல்லாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும்பணியும், பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 26 லட்சத்தில் பள்ளி கட்டிடங்கள், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.3 கோடியே 84 லட்சத்தில் சாலை மற்றும் பாலப்பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.3 கோடியே 52 லட்சத்தில் சாலை மற்றும் பாலப்பணிகள், வேளாண்மை பொறியியல்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட பணிகள் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் நபார்டு வங்கியின் கடனுதவியாக ரூ.24 கோடியே 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் சத்திய நாரா யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story