காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி,
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட தலைவர் ஷேக்அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சாதிக்பாட்சா பாவா, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தேசிய தர்காக்கள் பேரவை மாநிலதலைவர் சையத் ஷபிஅகமத், மாநில செயலாளர் சையத் இம்தியாஸ்அகமத், மாவட்ட செயலாளர் கனி, மாணவரணி செயலாளர் அப்துல்அசாருதீன், வார்டு செயலாளர் முகமதுரபீக் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story