ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்காவுக்கு சென்று ரசித்து பார்ப்பார்கள். மீன்கடைகளில் விற்பனையாகும் மீன்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனால் சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் காவிரி தண்ணீர் வரத்து கண்காணிக்கப்படுகிறது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை அளவிடுகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக காவிரியில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வினாடிக்கு 1,000 கனஅடி முதல் 1,200 கனஅடி வரை தண்ணீர் வந்தது. அதன்பின்னர் நீர்வரத்து மேலும் குறைந்தது. கடந்த மாதம் முதல் வினாடிக்கு 150 கனஅடி முதல் 200 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினமும் குறைவான அளவு தண்ணீரே வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணியளவில் 1,000 கனஅடி தண்ணீர் வந்தது. பிற்பகலில் 1,200 கனஅடியாக அதிகரித்தது. மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதா? அல்லது கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு தண்ணீர் அதிகளவில் வருகிறதா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 1,000 கனஅடி தண்ணீர் வந்தது, நீர்வரத்து அதிகரித்து உள்ளதற்கு காரணம் தெரியவில்லை, என்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story