திருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்

x
தினத்தந்தி 18 April 2018 10:30 PM GMT (Updated: 18 April 2018 9:38 PM GMT)

திருவண்ணாமலையில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்.

திருவண்ணாமலை, 

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சிவகுரு என்ற மாணவர் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கணேசன், ‘தூய்மை இந்தியா’ திட்ட மாநில தலைவர் ரோஷன்லால், சர்வதேச மனித உரிமை கழக விழுப்புர மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிர்வாகி சுரேஷ்குமார் வரவேற்றார்.

பின்னோக்கி செல்லும் மாணவரின் நடைபயணத்தை கலெக்டர் கந்தசாமி கையை பிடித்து வாழ்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வரை 7 கிலோ மீட்டர் மாணவர் சிவகுரு பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். நிகழ்ச்சியில் முத்தமிழ்கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story