அண்டார்டிகாவில் அதிகரித்த பனிப்பொழிவு


அண்டார்டிகாவில் அதிகரித்த பனிப்பொழிவு
x
தினத்தந்தி 21 April 2018 3:00 AM IST (Updated: 19 April 2018 1:36 PM IST)
t-max-icont-min-icon

அண்டார்டிகா கண்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

ண்டார்டிகா கண்டத்தில் தற்போது நிலவும் பனிப்பொழிவு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடக் கடுமையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது, 1801-1810-க்கும் இடையிலான பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010-க்கு இடையிலான பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டீஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம், கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், கூடுதல் பனி நீரின் அளவு, செத்த கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போது மானது.

புவி பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித் ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பனி, 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு, கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவின் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்பது ஆய்வாளர் களின் மதிப்பீடு. 

Next Story