தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 5 பேர் மீது வழக்கு
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெய்வேலி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த 10-ந் தேதி நெய்வேலி கியூ பாலம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தும், இந்திய ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன், தமிழ் விடுதலை கட்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ, சமூகநிதி மக்கள் கட்சி உமர்முக்தார் ஆகியோர் பேசியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தெர்மல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் வேல்முருகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story