தீக்குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை


தீக்குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 April 2018 4:45 AM IST (Updated: 20 April 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர் கோர்ட்டு மூலமாகத்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும் என்று எண்ணுகிறார்கள். சட்ட ரீதியாகவோ அல்லது அலுவலக ரீதியாகவோ நடவடிக்கை மேற்கொள்ள உள்ள கோரிக்கைகளை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், அலுவலர்கள், பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கிலும், பணியில் உள்ள அரசு அலுவலர்களை அச்சுறுத்தும் வகையிலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிலர் தீக்குளிக்க முயற்சித்து உள்ளனர்.

இதுபோன்ற செயல்பாடுகள் சட்டப்படி தவறானது. எனவே இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 133-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 (தற்கொலை முயற்சி), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 353 (அரசு அலுவலர்களின் கடமையை செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் 506(2) (கொலை மற்றும் கொடுங்காயங்கள் ஏற்படுத்த அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.
1 More update

Next Story