சதுப்புநில காடுகளை அழித்து கட்டப்பட்ட 180 வீடு, கடைகள் இடித்து அகற்றம்


சதுப்புநில காடுகளை அழித்து கட்டப்பட்ட 180 வீடு, கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 20 April 2018 5:26 AM IST (Updated: 20 April 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

சார்க்கோப்பில் சதுப்புநில காடுகளை அழித்து கட்டப்பட்ட180 வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. ரகளையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை காந்திவிலி சார்க்கோப் பஸ் டெப்போ எதிரில் சாய்தாம் நகர் உள்ளது. இங்குள்ள சதுப்பு நில காடுகள் அழிக்கப்பட்டு அங்கு ஆக்கிரமிப்புகள் பெருகி வந்தன. இதுபற்றி வனத்துறையின் சதுப்பு நில பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து சதுப்பு நில காடுகளை அழித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை இடித்து தள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த 180 ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன.

இதில் வீடுகள், கடைகள் மற்றும் இரண்டு வழிபாட்டு தலங்களும் அடங்கும். இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நங்கு யாதவ் (வயது56) என்பவர் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.


Next Story