கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழை குலைக்க முயற்சி
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் புகழை குலைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மராட்டிய, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது அடிப்படையற்ற, கெட்ட எண்ணத்தோடு கூடிய, தவறான, அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி, அவரது கறைபடாத புகழையும், செல்வாக்கையும் பழித்து கூறும் வகையில் சில சக்திகள் எடுக்கும் முயற்சிகளுக்கு மராட்டிய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
நாக்பூர் மற்றும் மராட்டிய மாநில பத்திரிகையாளர்கள் பாபு ஜி என்று அழைக்கப்படும் பன்வாரிலால் புரோகித்தை கடந்த பல ஆண்டுகளாக நன்கு அறிவார்கள்.
அவர் குறை கூறமுடியாத நேர்மைக்கும், நாணயத்துக்கும் சொந்தக்காரர். ஒரு தனி திறம் வாய்ந்த மக்கள் பிரதிநிதியான அவர், கடந்த 100 ஆண்டுகளாக மத்திய இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பழமையும், புகழும் வாய்ந்த ‘தி ஹிட்டாவாடா’ ஆங்கில பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்தார்.
பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகியான அவர், மிகவும் இனிமையான, நற்பண்புகளை உடையவர். பொதுவாழ்க்கையில் மிகவும் எளிமையான, புகழ் வாய்ந்தவராக திகழ்ந்தார். மத்திய இந்தியாவில் ஏராளமான பத்திரிகையாளர்களுக்கு அவர் தந்தை போன்றவர். எப்போதும் ஊழலுக்கும், அநீதிக்கும் எதிராக நின்றவர். பத்திரிகையாளர்களின் குரலை நசுக்க எடுக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் வெளிப்படையாக ஆதரவாக நின்றவர்.
அவருடைய புகழை கெடுக்கும் வகையில் உண்மைகளை திரித்து வெளியிடும் முயற்சிகளை கண்டு மராட்டிய, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
அவருடைய பத்திரிகையான ‘தி ஹிட்டாவாடா’வில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிகிறார்கள். மத்திய இந்தியாவில் அதிக பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரியும் பத்திரிகை அதுதான். அவருடைய நேர்மையான குணநலன்களின் காரணமாக, அவருடைய நிறுவனங்கள் எல்லாம் சட்டத்தை நிறைவேற்றும், விதிகளை பின்பற்றும், வேலைபார்ப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களாக திகழ்கின்றன.
இந்த அடிப்படையில் மிகுந்த வேதனையோடும், கவலையோடும் மீண்டும் மராட்டிய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக் கும் பத்திரிகையாளர் சங்கமும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழையும், செல்வாக்கையும் சீர்குலைக்க நினைக்கும் சில பிரிவினர்களின் தீய, உண்மையற்ற எண்ணத்தோடு செயல்படும் தீய முயற்சிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story