பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்


பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் 23-ந் தேதி நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 23-ந்தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் தலைமையில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கத்தினர், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்வது.

திருச்சியில் நடைபெறும் 2ஜி புத்தக திறனாய்வுக் கூட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வது. காவிரி நதிநீர் பங்கீட்டிற்காக நடைபெறும் நடை பயணத்தில் திரளாக கலந்து கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story