குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-21T01:40:08+05:30)

ஒளிமதி ஓடத்துறையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே ஒளிமதி ஓடத்துறையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் அருகே ஒளிமதி பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மின் மோட்டார் சரிவர இயங்காததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ஒளிமதி ஓடத்துறை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story