நிர்மலாதேவிக்கு 5 நாள் போலீஸ் காவல்: சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் கோர்ட்டு அனுமதி
பேராசிரியை நிர்மலாதேவியை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
சாத்தூர்,
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்கு அனுமதி கோரி நேற்று முன்தினம் சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சாத்தூர் கோர்ட்டில் நடைபெற்றது.
இதையொட்டி, மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி நேற்று காலை சாத்தூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்புடன் அவர் பகல் 12.30 மணிக்கு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோரும் உடன் வந்தனர். நிர்மலாதேவி வந்த வாகனத்துக்கு முன்னும் பின்னும் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வந்தன.
கோர்ட்டு பகுதியில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
முன்னதாக, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை தலைமையில் ஏராளமான பெண்கள் கோர்ட்டு முன்பு திரண்டிருந்தனர்.
நிர்மலாதேவி கொண்டு வரப்பட்டதும் அவரைக்கண்டித்து, ‘பெண் புரோக்கர் ஒழிக‘ என்று கோஷமிட்டனர். வக்கீல்கள் சங்கத்தலைவர் விஸ்வநாத் தலைமையில் வக்கீல்களும் நிர்மலாதேவியை கண்டித்து கோஷமிட்டனர். கோர்ட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் நிர்மலாதேவி கோர்ட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் கோர்ட்டு பிரதான வாசலை போலீசார் இழுத்து மூடினார்கள்.
பின்பு பரபரப்பான சூழ்நிலையில் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு கீதா 12.45 மணிக்கு விசாரணையை தொடங்கினார். நிர்மலாதேவியிடம் 10 நாள் விசாரிக்க அனுமதி கோரி இருந்த நிலையில், “4 நாட்கள் போதாதா“ என்று மாஜிஸ்திரேட்டு கேட்டார்.
இதற்கு அரசு வக்கீல் சொக்கலிங்கம், “இது முக்கியமான வழக்காக இருப்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருப்பதாலும் 5 நாட்களாவது வேண்டும்“ என்றார்.
இதை, மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும், போலீஸ் காவலில் செல்ல விருப்பமா என்று நிர்மலா தேவியிடம் மாஜிஸ்திரேட்டு கேட்டார். அதற்கு நிர்மலாதேவி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், விசாரணையின் போது தன் உறவினர்கள் மற்றும் வக்கீலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு ஒருமுறை மட்டும் அனுமதிக்க ஆட்சேபனை இல்லை என்று அரசு வக்கீல் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
இதனையடுத்து கோர்ட்டு நடைமுறை முடிந்து பகல் 1.45 மணிக்கு நிர்மலாதேவியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர். பேராசிரியை நிர்மலாதேவி சார்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை.
விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story