ஏ.டி.எம்., கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சார ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி


ஏ.டி.எம்., கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சார ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி
x
தினத்தந்தி 20 April 2018 11:51 PM GMT (Updated: 2018-04-21T05:21:26+05:30)

ஏ.டி.எம்., கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சார ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகள் டிக்கெட் வாங்க கவுண்ட்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க ரெயில்நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிகள் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம்.

இந்தநிலையில் தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது:- முதல் கட்டமாக இந்த வசதியை சி.எஸ்.எம்.டி.யில் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த திட்டத்துக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிற ரெயில்நிலையங்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story