தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்


தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 April 2018 10:00 PM GMT (Updated: 21 April 2018 7:18 PM GMT)

ஈரோட்டில் தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு, 

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் மைவிழி முருகேசன் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் இளமதி, துணை அமைப்பாளர்கள் கீதா, கலைச்செல்வி, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பெண்களை இழிவுபடுத்தியும், தரக்குறைவாகவும் கருத்துகளை வெளியிட்ட பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்வது. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அரசியல் நாகரீகம் இல்லாமல் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டு பெண்களை அவமானப்படுத்துவதால் அவருக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்வது.

இதுபோன்ற கருத்துகளை இனிமேல் வெளியிட்டால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் தனலட்சுமி, சத்தியபாமா, மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆசியாமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story