செங்கல்பட்டு அருகே பஸ் பள்ளத்தில் விழுந்தது; 6 பேர் காயம்


செங்கல்பட்டு அருகே பஸ் பள்ளத்தில் விழுந்தது; 6 பேர் காயம்
x
தினத்தந்தி 22 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பள்ளத்தில் பஸ் விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் ஜங்ஷனில் நேற்று காலை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஜங்ஷனில் நின்று இருபுறமும் ஏதேனும் வாகனம் வருகிறதா? என்று பார்க்காமல் திடீரென தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது கடலூரில் இருந்து 38 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த அரசு பஸ் டிரைவர் குறுக்கே புகுந்த மோட்டார் சைக்கிளை பார்த்து திடீரென பிரேக் பிடித்தார்.

இதனால் பஸ்சின் பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இடது புறம் உள்ள 20 அடி பள்ளத்தில் பஸ் விழுந்தது. இந்த விபத்தால் அரசு பஸ் டிரைவரான கடலூரை சேர்ந்த தேவநாதன் (வயது 49). கண்டக்டர் ராதாகிருஷ்ணன் (50) உள்பட 6 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Next Story