‘நீட்’ தேர்வு இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது வைரமுத்து பேட்டி


‘நீட்’ தேர்வு இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 22 April 2018 4:15 AM IST (Updated: 22 April 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது நாமக்கல்லில் வைரமுத்து பேட்டி.

நாமக்கல்,

நாமக்கல்லில் நவோதயா அகடாமி பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு என்பது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கல்வியாளர்களால் கருதப்படுகிறது. சோதனை மேல் சோதனை என்ற பாட்டை பாட வேண்டிய நிலைமைக்கு மாணவர்களை ஆளாக்கி இருக்கிறார்கள். பள்ளி இறுதி வரைக்கும் அவர்கள் பெற்ற அறிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கல்வி என்பது மத்திய அரசின் பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றப்படுகிற திருநாள், கல்விக்கு பெரு நாள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story