அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கிய 3 மினி பஸ்கள் பறிமுதல்


அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கிய 3 மினி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2018 3:30 AM IST (Updated: 22 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் போக்குவரத்து துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

நாகர்கோவில்,

மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் போக்குவரத்து துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மார்த்தாண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அடுத்தடுத்து வந்த 2 மினிபஸ்களை மடக்கி சோதனை செய்தனர். இதில், மினிபஸ்கள் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மினிபஸ்சை மார்த்தாண்டம் போலீசார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல், இரவிபுதூர்கடை அருகே தடம்மாறி இயக்கப்பட்ட மினிபஸ் ஒன்றை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், மினிபஸ்சை அதன் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசெல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அதிகாரிகள் வந்த ஜீப் மீது எதிர்பாராதவிதமாக மினிபஸ் மோதி நின்றது. பின்னர் மினிபஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், ஜீப்பை சேதப்படுத்தியது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story