காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுனர்களுக்கு 2-வது கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் ராஜதுரை, ரவிச்சந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story