‘நீட்’ தேர்வு நாளில் ரெயில்கள் ரத்தாவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
‘நீட்’ தேர்வு நாளில் 9 எக்ஸ்பிரஸ் ரெயிலை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளதால் தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை,
பராமரிப்பு பணியை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் டாக்டராக வேண்டும் என்பதுதான் கனவாக உள்ளது. இப்போது ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றால்தான் அந்த கனவு நனவாக முடியும். இந்த நிலையில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு 2-வது முறையாக வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே ‘நீட்’தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் 6-ந் தேதி நடைபெறும் தேர்வை எழுதுவதற்காக ‘ஹால்டிக்கெட்’டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த மையங்களுக்கு செல்வதே இப்போது முதல் சோதனையாகி விட்டது.
காரணம் தேர்வு நடைபெறும் 6-ந் தேதி அரக்கோணம் வழியாக இயங்கும் 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது தான். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் விரிவாக்கப்பணி மற்றும் வளைவான தண்டவாளங்களை நேர் செய்து அதிக வேகத்தில் ரெயில் செல்ல தயார்படுத்துவது போன்ற பணிகள் அங்கு நடக்கிறது. பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்த பணிகள் நடப்பது வரவேற்கத்தக்கது தான்.
ஆனால் பணிகள் முழுவதையும் முடிக்க ரெயில்வே நிர்வாகம் தேர்வு செய்த நாள்தான் இப்போது ‘நீட்’ தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளை பதற வைத்துள்ளது. பெரும்பாலான தேர்வு மையங்கள் வேலூர், காட்பாடி, ஆற்காடு, மேல் விஷாரம், அரக்கோணம் ஆகிய ஊர்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மட்டுமல்லாது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு தேர்வு எழுத உள்ளனர்.
இவர்கள் வேலூர், காட்பாடி, அரக்கோணத்திற்கு ரெயிலில் வருவது தான் எளிதாக இருக்கும். ஆனால் தேர்வு நடைபெறும் 6-ந் தேதி முக்கிய ரெயில்களான சென்னை- மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை இடையே இயங்கும் கோவை எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அந்த ரெயில்களை நம்பி தேர்வு எழுத இருந்த மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் இப்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
திருப்பத்தூர் பகுதியிலிருந்து அரக்கோணத்திற்கு பஸ்சில் சென்றால் 4 மணி நேரம் ஆகும். ஆனால் ரெயிலில் 2 மணி நேரத்தில் சென்று விடலாம். தேர்வு மையங்களில் சோதனை நடைபெறும். அதற்கு வசதியாக முதல் பிரிவை சேர்ந்தவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்ளும், 2-வதாக 8.30 மணி முதல் 9.30 மணிக்குள்ளும் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்லலாம் என நினைத்திருந்தனர். அதேபோல் வேலூர் மையத்துக்கு வர சென்னை, அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலை நம்பி இருந்தனர்.
ஆனால் இந்த ரெயில்கள் முழுவதுமாக 6-ந் தேதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயிலை நம்பி இருந்தவர்கள் பஸ்சில் சென்றால் தேர்வு மையத்துக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என்பதால் வாடகைக்கார்களை பிடித்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் இது வரை தேர்வுக்கு தயராகி இருந்த மாணவ, மாணவிகள் பதற்றத்தில் உள்ளனர்.
எனவே பராமரிப்பு பணிகளின் நிறைவு நாள் மே 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என்பதை மாற்றி வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமையை ரெயில்வே நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும். ரெயில்வே பொறியியல் துறை, கோட்ட ரெயில்வே நிர்வாகம் அதற்கான நாளை தேர்வு செய்து தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்து பணிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘நீட்’ தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story