தடைக்காலம் எதிரொலி கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடிதளங்கள் வெறிச்சோடின
தடைக்காலம் எதிரொலியாக கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடின.
கோட்டைப்பட்டினம்,
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 61 நாட்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் மீன் பிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாகை, காரைக்கால், ராமேசுவரம், நாகர்கோவில், கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது தடைக்காலம் என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி விட்டு மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் மீன்பிடி தளமும், மீனவ கிராமங்களும் மற்றும் குடியிருப்பு பகுதிகளும் ஆட்கள் நடமாட்டம் இல்லாம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி தளங்கள் களை இழந்து கிடக்கிறது.

Related Tags :
Next Story