2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் - பொருட்கள் திருட்டு மேலும் 3 கடைகளில் கொள்ளை முயற்சி
காட்டூர் பகுதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் 3 கடைகளில் கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி காட்டூர் பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பிலோமினாள் ஆலயம் எதிர்புறம் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில் மளிகை கடைகள், நகை அடகு கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என்று பல்வேறு கடைகள் உள்ளன. வழக்கம் போல் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும் இயங்கின. வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் கடைகளை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று ஒரு வணிக வளாகத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளரும், காட்டூர் வியாபாரிகள் நலச்சங்க கவுரவ தலைவருமான தெற்கு காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்த திருமேனி ஆழ்வார் (வயது 55) கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. கடை முழுவதும் சுற்றி பார்த்தபோது கடையில் கார் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும் சில சிகரெட் பண்டல்கள் உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது. கடையில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்திருந்தனர்.
இதேபோல் அந்த வணிக வளாகத்தில் மேல்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையிலும் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். மற்றும் பக்கத்து வணிக வளாகத்தில் நகை அடகு கடை உள்ளிட்ட 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள் ஒரு கடையின் பூட்டை உடைத்தபோது வணிக வளாகத்தில் உள்ள டெய்லர் கடையில் இருந்த ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அந்த சத்தத்தை கேட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் திருவெறும்பூர் போலீசார் மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்படுவதற்கு முன்பு பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அதில் மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
100 அடி தூரத்தில் புறக்காவல் நிலையம் இருந்தும், கடைகளில் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போனது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story